செவ்வாய், 13 அக்டோபர், 2015

முயிறு மூசு பைங்கூழ்

முயிறு மூசு பைங்கூழ்
=============================================கல்லிடைபரணன்

(தலைவியின் நிலை கண்ட தோழியின் கூற்று)


முயிறு மூசு பைங்கூழ் நெல்லின்
முதிர்தரு குடம்பை முட்டிச்சிறைக்கும்
புல்லுயிரன்ன நாள்பல நீண்டு
நோதல் தேற்றா ஆயினள் ஆயிழை.
புல்லென மொழிந்த காதல் கிளவி
ஊரிடை படுக்கும் தீப்பொறி செத்து
அலர்மழை தூஉய் ஆவியுள் ஆர்த்து
அடுமனை வெங்குரல் கனைசெய் காட்டும்.
நெருநல் வருமென நெட்டுயிர் செறித்து
அங்கண் அவன் விழி தன் விழி பேர்த்து
நீள்தடம் நோக்கும் அளியளோ சேயிழை!
பொள்ளா புல்லின் மறைகண் புக்க‌
பொன்சிறைத் தும்பிகள் அலமரல் செய்பு
கான் அடர்ந்தன்ன குவளைக்காட்டின்
விழிபடர்த்து விஞ்சும் எரிநீர் பொழிய‌
ஏந்திழை தேயும் இம்மாலைக்கண்ணே.

===============================================================
(அரும்பொருள் உரை தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக